போபாலில் உள்ள ஒரு இளம் பெண், உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற்றுள்ளார்.
இந்தச் செய்தி வந்த உடனே, அவரது குடும்பம் மகிழ்ச்சியில் ஆழ்ந்து கொண்டாடியது. அந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கானோர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். ஹார்வர்டில் சேர்வது பல மாணவர்களின் கனவாக இருந்தாலும், போபாலைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு அது நனவாகியுள்ளது. அவருக்கு மின்னஞ்சல் மூலமாகவே சேர்க்கை ஒப்புதல் கடிதம் வந்தது. அதைத் திறந்தவுடன், குடும்பம் முழுவதும் உணர்ச்சியால் வெடித்து, மகிழ்ச்சியில் ஆடிப்பாடினர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், பெண் கணினியில் தனது சேர்க்கையை உறுதி செய்யும் தருணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அதைப் பார்த்தவுடனே, பின்னால் நின்றிருந்த அவரது பெற்றோர் மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தனர். தாய் மகளை அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட, தந்தை மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். அந்த நேரத்தில் தாய் கடவுளுக்கு நன்றி கூறியதும், தந்தை மகளை முதுகில் தட்டிக்கொண்டு பெருமையுடன் பாராட்டியதும் வீடியோவில் காண முடிந்தது.
View this post on Instagram
“>
இந்த உணர்ச்சிபூர்வமான வீடியோ, இன்ஸ்டாகிராமில் purvainawrap என்ற ஐடியிலிருந்து பகிரப்பட்டுள்ளது. “நாங்கள் இதை சாதித்தோம். என் குடும்பம் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள இந்தக் காணொளி ஏற்கனவே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக்குகள் அளித்து கருத்துகளை பகிர்ந்துள்ளனர். பலர் “இந்த வீடியோ என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது”, “உங்கள் வெற்றியைப் பார்த்து நாங்கள் மகிழ்கிறோம், வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
