தோட்டக்கலை திட்டத்தின் கீழ் வாழை விவசாயத்திற்கு பீகார் மாநில அரசு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. திசு வளர்ப்பு தொழில்நுட்பம் மூலமாக வாழை மரம் சாகுபடிக்கு விவசாயிகள் செய்யும் செலவில் 50 சதவீதம் மானியம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமாக பாரம்பரிய முறையை விட 60 நாட்களுக்கு முன்னதாகவே வாழை மரங்கள் தயாராகிவிடும் என்பதோடு மகசூடும் அதிகம் என்பது இதன் சிறப்பாகும்.