உத்தர் பிரதேச மாநில அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதம் தொடர்புடைய நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. ஆனாலும் சில பள்ளி கல்லூரிகளில் மதம் சார்ந்த சம்பவங்கள் நடைபெறுகிறது.

அவ்வகையில் உத்தர் பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள் தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பள்ளியின் முதல்வர் மீரா யாதவ், ஆசிரியர்கள் மம்தா மிஸ்ரா, பாத்திமா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.