நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது. இதில் கேரள முன்னாள் முதல்வர் மறைந்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான வி.எஸ். அச்சுதானந்தன், கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி காலமானார். 2006 முதல் 2011 வரை கேரள மாநில முதலமைச்சராகப் பணியாற்றிய இவர், பல தசாப்தங்களாகப் பொதுவாழ்வில் ஏழை எளிய மக்களின் குரலாக ஒலித்தவர். அவரது சேவையைப் பாராட்டி மரணத்திற்குப் பின்இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மேலும் இருவருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளன:

இதேபோன்று ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) தலைவருமான மறைந்த ஷிபு சோரனுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு முறை மக்களவை உறுப்பினராகவும், மூன்று முறை முதலமைச்சராகவும் பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு காலமானார்.

மேலும் இந்த ஆண்டு மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.