
திருப்பூரில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கணேஷ் என்பவர் இயக்கியுள்ளார். நடத்துனராக சிவராஜ் என்பவர் பணியில் இருந்தார். அந்த பேருந்தில் 72 பயணிகள் இருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு அவர்கள் எஸ்டேட் பகுதி 33வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த ஓட்டுநர் கணேசன் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.