ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் மதீஷா பத்திரனாவுக்கு இலங்கை தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது..

கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மே 29ம் தேதி அகமதாபாத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இலங்கை வீரர் மதீஷா பத்திரனாவுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்புகளை அளித்து வந்தார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா பாணியில் பந்து வீசும் பதிரானா, சென்னை அணியில் கேப்டன் தோனி கொடுத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக டெத் ஓவர்களில் அவரது பந்துவீச்சைப் பார்த்து கேப்டன் தோனி பலமுறை அவரைப் பாராட்டியுள்ளார்.

பத்திரனா இந்த சீசனில் சென்னை அணிக்காக 12 போட்டிகளில் 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் 4 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பத்திரனாவுக்கு வாழ்த்து தெரிவித்த மலிங்கா, அவரது திறமையை அறிந்து வாய்ப்பு அளித்த கேப்டன் தோனிக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பும் நிலையில், ஆப்கானிஸ்தான் தாயகத்தில் இருக்கும் மதீஷா பத்திரனாவுக்கு அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.