ஹரியானா மாநிலம் குர்கானில், தெருநாய்களுக்கு உணவு வழங்கிய “சமூக சேவையாளர்” ஒருவர் மீது தாக்குதல் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில், உணவளிப்பவரை ஒரு நபர் குச்சியால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
தாக்கிய நபர், “நீ இங்க ஏன் இருக்கிறாய்? உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி உன்னை யார் அனுப்பினார்கள்?” என கேட்டதோடு, “நான் உன்னை துண்டு துண்டாக வெட்டி எங்காவது வீசிவிடுவேன்” என உயிருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார். குற்றவாளி, தாக்குதலுக்கு முன் நாய்களுக்கு உணவு வைக்க பயன்படுத்திய பாத்திரங்களை குச்சியால் அடிக்கும் காட்சியும் அந்தக் காணொளியில் தெளிவாக இருக்கிறது.
View this post on Instagram
“>
இந்த வீடியோ முதன்முதலில் “Gurgaon Dog Adoption” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அதில், “தெரு நாய்களுக்கு உணவளிப்பது சட்டத்துக்கு எதிரானது அல்ல. உச்சநீதிமன்றம் உணவளிக்கும் இடங்களை மட்டும் கட்டுப்பாடு விதித்துள்ளது ஆனால் உணவு அளிப்பதை தடை செய்யவில்லை” எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக திடீர் கண்டனங்கள் எழுந்துள்ளன. சமூக ஆர்வலர்கள் பலர் தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
