உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் திறந்து வரும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது chat lock வம்சத்தை whatsapp நிறுவனம் கொண்டு வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் தனிப்பட்ட ஒருவருடைய chat box ஐ பிறர் பார்க்க முடியாத அளவுக்கு நாம் லாக் செய்து கொள்ள முடியும்.

உங்களது கைரேகை அல்லது பாஸ்வேர்டு பதிவிட்டால் மட்டுமே ஓபன் செய்ய முடியும்.இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வாட்ஸ் அப்பில் நீங்கள் லாக் செய்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர் அனுப்பும் வீடியோக்கள் மற்றும் ஆடியோ, இமேஜ் போன்றவை உங்களது கேலரியில் பதிவிறக்கம் செய்யப்படாது,நீங்கள் அனுமதித்தால் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.