உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் அக்டோபர் மாதம் whatsapp குரூப்பில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 1,024 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 256 பேர் மட்டுமே ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இருக்க முடியும்.

அதன்பிறகு எண்ணிக்கை 512 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் பிறகு 1024 ஆக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து பயனர்களின் தனி உரிமை பாதுகாப்பு வழங்கும் விதமாக ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் அனுப்பப்படும் மெசேஜ் மற்றும் வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் மற்றும் ரெக்கார்டிங் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ஆடியோக்களையும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் அம்சம் அண்மையில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் கூடுதல் அம்சமாக வாட்ஸாப் குரூப்பில் யார் இணைய வேண்டும் என்பதை குரூப் அட்மின் முடிவு செய்யும் விதமாக தற்போது மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதற்கான ஆப்சன் செட்டிங்கில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குரூப் அட்மின் விரும்பிய நபரை மட்டுமே குரூப்பில் அனுமதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.