
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு நிமிடம் வரை நீளமான வீடியோக்களை பகிரும் வகையிலான புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போது 30 வினாடிகள் வரையிலான வீடியோக்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்க முடியும். அதனை ஒரு நிமிடம் வரையிலான வீடியோவாக பகிர அனுமதிக்க பீட்டா திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் விரைவில் இது அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.