உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாம் தினந்தோறும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வந்தாலும் நமக்கு தெரியாத ஏராளமான விஷயங்கள் இதில் உள்ளன.

உங்களுடைய வாட்சப்பில் இருந்து யாருக்காவது மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் முதலில் உங்களுடைய whatsapp காண்டாக்ட்டில் அவர்களின் whatsapp எண் சேமிக்கப்பட்டு இருக்க வேண்டும். வாட்ஸ்அப் எண்களை நம்முடைய காண்டக்ட்டில் சேமித்து வைக்காமல் வேறு ஒருவருக்கு எப்படி மெசேஜ் அனுப்புவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முறை 1:

இதற்கு முதலில் உங்களுடைய போனில் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை திறக்க வேண்டும்.

பிறகு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்ப விரும்பும் மொபைல் நம்பரை copy செய்து கீழே காணப்படும் new chat என்ற பட்டனை அழுத்தி வாட்ஸாப் கான்டக்ட்களின் கீழ் உள்ள உங்களுடைய பெயரை tap செய்ய வேண்டும்.

பிறகு டெக்ஸ்ட் பாக்ஸில் நீங்கள் காபி செய்த மொபைல் நம்பரை பேஸ்ட் செய்து send என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

மொபைல் நம்பரை டேப் செய்த பின்னர் அந்த நம்பர் வாட்ஸ் அப்பில் இருந்தால் உங்களால் chat with ஆப்ஷனை காண முடியும்.

இதனை டேப் செய்து குறித்த நம்பரை சேமிக்காமல் உங்களால் whatsapp மெசேஜை அனுப்ப முடியும்.

முறை :2

முதலில் மொபைலில் பிரவுசரை திறந்து அட்ரஸ் பாரில் https://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx. xxxxxxxxxx  என்ற லிங்கை காபி செய்து பேஸ்ட் செய்ய வேண்டும்.

phone=xxxxxxxxxx. xxxxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் Whatsapp மெசேஜ் அனுப்ப விரும்பும் மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

தொலைபேசி இலக்கங்களுக்கு முன்னர்  நாட்டின் குறியீடு இருப்பதை உறுதி செய்து பிறகு லிங்கை திறக்க அதனை டேப் செய்து Chat ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.

அடுத்து நீங்கள் அந்த நபரின் Whatsapp சாட்டிற்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள். அவருடைய போன் நம்பரை சேமிக்காமலேயே உங்களால் குறித்த நபருக்கு மெசேஜ் அனுப்ப முடியும்.