இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழும் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பலவகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஏராளமான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தற்போது ரிலையன்ஸ் ஜியோ சினிமா பிரீமியம் புதிய வருடாந்திர சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

599 ரூபாய்க்கான வருடாந்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுக சலுகையின் கீழ் ஆண்டு சந்தா விலையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். அதாவது இந்த திட்டம் வெறும் 299 ரூபாய்க்கு கிடைக்கும். மேலும் முதல் 12 மாத பில்லிங் சுழற்சி முடிந்த பிறகு சந்தாவுக்கு முழு ரீச்சார்ஜ் தேவைப்படும். 4K வீடியோ தரத்துடன் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.