இன்றைய காலகட்டத்தில் உலகில் எந்த ஒரு இடத்தில் வித்தியாசமான சம்பவங்கள் மற்றும் தகராறுகள் நடந்தாலும் அது வீடியோவாக வைரல் ஆகிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகிறது. அதாவது ஒரு கல்லூரியின் வகுப்பறையில் வைத்து இரு மாணவிகள் கடுமையாக மோதி கொள்கிறார்கள். அதில் ஒரு மாணவி மற்றொரு மாணவியை கன்னத்தில் அடித்த நிலையில் கோபத்தில் அவர் அந்த மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து முதுகில் குத்துகிறார்.

ஆவேசம் தீராமல் இரு மாணவிகளும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் நிலையில் அவர்களை சக மாணவிகள் விலகி விடுகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகும் நிலையில் இது எந்த கல்லூரியில் நடந்தது எங்கு நடந்தது என்ற விவரம் சரிவர தெரியவில்லை. மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.