தமிழக அரசியலில் அதிமுகவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் அனல் பறந்து வரும் வேளையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“போங்க போங்க என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், வாங்க வாங்க என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் பகிரங்கமாக உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தோல்விக்கான காரணங்களை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஆராய வேண்டும் என்றும், கழகத்தின் எதிர்காலப் பாதையை ஒன்றிணைந்து தீர்மானித்தால் மட்டுமே கட்சி சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இப்போதும் நீங்கள் அழைத்தால் பேச நாங்கள் தயார்” என அவர் தூதுவிட்டுள்ள விதம், பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் மீண்டும் இணைவதற்கான சமிக்ஞையா அல்லது இபிஎஸ்-க்கு விடுக்கப்பட்ட மறைமுக அழுத்தமா என்ற கோணத்தில் அரசியல் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை.
ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள்…
— SP Velumani – Say YES to AIADMK (@SPVelumanicbe) May 15, 2026
“>
