
சென்னை மாவட்டத்தில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சங்கீதாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தனியார் பள்ளியில் 22 வயதுடைய இளம்பெண் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன்தினம் புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியையை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடர்பாக திட்டமிட்டு விவாதிப்பதற்காக தனது வீட்டிற்கு வருமாறு சங்கீதா அழைத்துள்ளார். அதன்படி வீட்டிற்கு வந்த இளம் பெண்ணுக்கு சங்கீதா குளிர்பானம் கொடுத்துள்ளார்.
அதை குறித்து சில நிமிடங்களில் அந்த இளம்பெண் மயங்கி விழுந்தார். அதன் பின்னர் இளம் பெண்ணிடம் சங்கீதா பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். மயக்கம் தெளிந்த இளம் பெண் தனது உடலில் இருக்கும் காயங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பித்து சென்றார். இதுகுறித்து திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று சங்கீதாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது