சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில், மக்கள் கவனத்தை பெரிதாக ஈர்த்தது நடிகரும், பிரபல காமெடி ஆர்டிஸ்டுமான கிங்காங் மகளின் திருமண விழா தான். இந்த திருமணத்திற்கு பத்திரிக்கை வழங்கும் நிகழ்வே ட்ரெண்ட் ஆனது.

விழாவை பெரிய அளவில், பாராட்டு கிடைக்கும் வகையில் நடத்தி, அனைத்து தரப்பினரின் பார்வையையும் குவித்துள்ளார் கிங்காங். நடிகை தேவயானி, யோகிபாபு உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தாலும், கூட்டம் அதிகமாக இருப்பதை பார்த்து பின் வாங்கியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Actorkingkong (@actor_kingkong)

முக்கியமாக, கிங்காங் மகள், நடிகர் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகை என்பதால், அவருக்கு நேரிலே அழைப்பிதழ் வழங்கப்பட்டும் அவர் திருமணத்திற்கு வராதது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, திருமணத்திற்கு வர முடியாத நடிகர் மன்சூர் அலிகான், கிங்காங் வீட்டுக்கு சென்று மணமக்களை நேரில் வாழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த திருமண விழாவில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், திமுக பிரமுகர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், ஜெயகுமார் தனது இடுப்பில் கிங்காஙை தூக்கிக்கொண்டு நடந்த விதம் அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.