தமிழக மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் முழு வாக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை வாக்காளர்களுக்கு செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் முழு ஓட்டை பதிவு செய்யவும் அவர்களுக்கு வாக்களிக்க உதவுவதற்கும் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது மாற்றுத்திறனாளி வாக்காளர் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் எங்களுக்கு அழைத்தால் அவர்கள் வந்து செல்ல வாகன ஏற்பாடு செய்து தரப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த உதவியை பெறுவதற்கு saksham என்ற செயலி அல்லது 1950 என்ற எண் மூலமாக மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.