
தமிழகத்தில் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் வாகனத்தின் ஆர்.சி உடனடியாக ரத்து செய்யும் நடைமுறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பிடிபட்ட சிறாருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது. இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தமிழ்நாட்டில் தான் அதிகம். இதனை கருத்தில் கொண்டு இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.