இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் வெளியூருக்கு பயணிக்கும் போது சுங்கவரி செலுத்த சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதில் பெரும் நேரத்தை வீணடிப்பதாகவும் தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்களின் சிரமத்தை போக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலமாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

மார்ச் மாதம் முதல் இந்தியாவில் சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்பட்ட இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் மூலமாக பாஸ்ட் டேக் கார்டு இல்லாதவர்கள் இரண்டு மடங்கு பணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஜிபிஎஸ் மூலமாக நேரடியாக தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.