நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி செல்லும் கொண்டை ஊசி வளைவில் கடமை சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். அதில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இது போன்ற விபத்துக்கள் பெரும்பாலும் ஓட்டுனரின் கவனக்குறைவால் நடைபெறும் நிலையில் நீண்ட நாள் சுற்றுலா செல்வதற்காக அழைத்துச் செல்லும் வாகனம் ஓட்டிகளுக்காக தனியாக ஓய்வு வழங்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு வாகன ஓட்டிகளுக்கு எந்த வித ஓய்வும் வழங்கப்படாததால் தொடர்ந்து வேலைக்கு உட்படுத்தும் போது வாகன உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அதே சமயம் வாகன ஓட்டிகளுக்கு சரியான ஓய்வு வழங்கினாலே விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.