
சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டினம் பக்கத்தில் போலீஸ் பூத்தில் வைத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமி வழி தவறி வந்ததால் காவலரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன் பணியில் இருந்துள்ளார்.
உடனே ராமன் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் ராமனை கைது செய்தனர்.