புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்களில் அரியவகை மீன்களும், ராட்சத மீன்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்று கோட்டைப்பட்டினம் மீனவர் வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அதன் விலை 45 கிலோ ஆகும்.

அந்த மின் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த மீனை வியாபாரி ஒருவர் 15,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். அந்த மீன் ஒரு கிலோ 400 முதல் 450 ரூபாய் வரை விற்பனையானது. மருத்துவ குணம் வாய்ந்த அந்த மீனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.