
நைஜீரியாவில் உள்ள மைதமா நகரில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு நடந்த ஒரு விழாவில் பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக கூறியுள்ள நிலையில் பொதுமக்கள் அங்கு குவிந்துள்ளனர். இந்த நாள் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவவதால் லட்சக்கணக்கான மக்கள் ஏழ்மையில் வாடுகிறார்கள். மேலும் இதன் காரணமாகத்தான் பரிசு பொருட்கள் வாங்க குவிந்த போது இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் கூட ஒரு பள்ளிக்கூடத்தில் பரிசுப் பொருட்கள் வாங்க இப்படி மக்கள் குவிந்த போது ஏராளமான மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.