இந்தியாவின் பிரமாண்டமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி – தீபங்களின் திருவிழா, 14 ஆண்டுகள் வனவாசம் செய்துவிட்டு தேவி சீதா மற்றும் லட்சுமணனுடன் ராமர் அயோத்திக்குத் திரும்பியதைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் பிரம்மாண்டமான அளவில் கொண்டாடப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இந்த பண்டிகை தீமையை வென்றதன் அடையாளமாக மாறியுள்ளது மற்றும் இந்தியா முழுவதும் அதே ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.

விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தைகள் முதல் தீபாவளி மேளாக்கள் மற்றும் ஷாப்பிங் சலுகைகள் வரை, தீபாவளி கொண்டாட்டம் தீபாவளியின் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்குகிறது. தீபாவளி பண்டிகையின்போது வீட்டை விளக்குகளால் அலங்கரிப்படி எப்படி என்று பார்க்கலாம். வீட்டை சுற்றிலும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கலாம். அதே நேரம் வீட்டு வாசலில் முன்பு பல வண்ணங்கள் நிறைந்த மின்விளக்கு தோரணங்களை பயன்படுத்தியும் வீட்டை அழகு ஆக்கலாம். சிறிய கண்ணாடி ஜாடிக்குள் சிறிய அளவு மின்விளக்குகளை குவியலாக சேர்த்து ஒளிர செய்வது மிகவும் அழகாக இருக்கும். அதே போல பல விளக்கு ஜாடிகளை வீடு எங்கும் வைத்து வீட்டை அலங்கரிக்கலாம் .பூஜை அறையில் வைத்து வழிபட உதவும் குத்து விளக்கு வீட்டின் தலைவாசல் பகுதியில் வைத்து அலங்கரிக்கலாம். அதேநேரம் குத்து விளக்கை சுற்றி பூக்கோலம் அல்லது வண்ண கோலம் இடும் அழகு படுத்தலாம்.