வருமான வரி செலுத்துபவர்கள் நடப்பு நிதி ஆண்டுக்கான தங்கள் வருமான வரி தாக்கலை காலக்கெடு தேவையான வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் தாமதமாக செலுத்தும் அபராத தொகையுடன் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அதாவது ஐந்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் தங்களின் வருமான வரியை செலுத்தலாம். ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாயை தாண்டவில்லையென்றால் அவர்கள் தாமத கட்டணம் ஆயிரம் ரூபாய் மட்டும் எனவும் வருமான வரியில் ஏதாவது நிலவைத் தொகை வந்தால் அவர்களுக்கு கூடுதல் வருமான வரி வசூல் செய்யப்படும் எனவும் வருமான வரித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.