மகாராஷ்டிரா மாநிலத்தில் சுய உதவி குழுக்களுக்கு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை தற்போது 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதுவரை வங்கிகள் மூலமாக 4.75 லட்சம் சுய உதவி குழுக்களுக்கு 11 ஆயிரத்து 771 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடனுதவி உயர்வு பொருளாதாரம் மற்றும் தொழில் முன்னேற்றம் அடைவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இந்த திட்டத்திற்காக மாநில அரசின் பட்ஜெட்டில் 913 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சுய உதவி குழுக்களில் இடம் பெற்றுள்ள 46,956 உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 3000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாத ஊதியம் 20 சதவீதம் வரை உயர்த்தியும் மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.