பொதுவாக சாமானிய மக்கள் தங்களுடைய வருமானத்திற்காக மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். தங்களுடைய உயிரை கூட பொருட்படுத்தாமல் அவர்கள் வயிற்றுப் பசிக்காக கடுமையாக உழைப்பதாக கூறி தற்போது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் லைக் வாங்குவதற்காக வீடியோக்களை வெளியிடும் நிலையில் தற்போது ஒருவர் தன் பிழைப்புக்காக மிகவும் ஆபத்தான முறையில் மீன்பாடி வண்டியில் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதாவது சாலையில் வாலிபர் ஒருவர் மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு மீன் பாடி வண்டியில் செல்கிறார். அப்போது வண்டியில் அவர் உட்கார இடமில்லாததால் அவர் அதில் படுத்து கொண்டே உயிரை பணயம் வைத்து வண்டி ஓட்டுகிறார். இது பார்ப்பதற்கு ஒரு சாகசம் போல் தெரிகிறது. ஆனாலும் அவர் தன் வயிற்று பிழைப்புக்காக தான் வண்டி ஓட்டி செல்கிறார். மேலும் இந்த வீடியோவை இந்தியாவில் சூப்பர் மேன் என்ற தலைப்பில் வைரலாக்கி வருகின்றனர்.