இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், நடிகை த்ரிஷா குறித்து அண்மையில் தெரிவித்த கருத்தும், அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள விளக்க வீடியோவும் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் “குந்தவை (த்ரிஷா) இப்போது வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கப்பட்டால் நல்லது” என்று பார்த்திபன் பேசியது த்ரிஷா தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அதற்குப் பார்த்திபன் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது தனது யூடியூப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பார்த்திபன், “த்ரிஷா கலந்துகொண்ட அந்தத் திருமண நிகழ்ச்சிதான் நண்பர் விஜய்க்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது; அந்தத் திருமணத்திற்கு அவர் போகாமல் இருந்திருக்கலாம் என்பதே என் அடிமனதில் இருந்த ஆதங்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், த்ரிஷாவைப் பற்றிப் பொதுவெளியில் வந்த மற்ற கொச்சையான விமர்சனங்களுக்கு அவர் எதிர்வினை ஆற்றாமல், தமக்கு மட்டும் கண்டனம் தெரிவித்ததால், தான் வருத்தம் தெரிவித்தது தவறு என்று பலரும் கூறுவதாக அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
Good night friends https://t.co/pF52GZ8nqi
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 9, 2026
“>
குறிப்பாக, “த்ரிஷா விவகாரத்தில் நான் வருத்தம் தெரிவித்த பிறகு வந்த ஒரு மூன்றாம் தர ட்வீட் என்னை மிகவும் காயப்படுத்தியது. இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் அன்றே வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்” என்று பார்த்திபன் அதிரடியாகப் பேசியுள்ளார்.
விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் குடும்ப விவகாரங்களை மையப்படுத்திப் பேசியுள்ள பார்த்திபன், இந்த விவகாரத்தில் த்ரிஷாவை ‘மூன்றாவது மனுஷி’ என்று குறிப்பிட்டிருப்பது த்ரிஷா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய் – த்ரிஷா விவகாரம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், பார்த்திபனின் இந்த வெளிப்படையான பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல மாறியுள்ளது.
