உலக மருத்துவ வரலாற்றிலேயே முதல்முறையாக, இரண்டு மனித வடிவ ரோபோக்கள் (Humanoid Robots) இணைந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளன. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எதிர்காலத்தில் நிஜ மருத்துவர்களுக்குப் பதிலாக ரோபோக்களைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்பதை ஆராய்வதற்காக இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனையில், ஆபரேஷன் தியேட்டரில் இருந்த இரண்டு மனித ரோபோக்களை, மருத்துவர்கள் மிகத் தொலைதூரக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி ரிமோட் மூலம் இயக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள் பன்றி ஒன்றின் உடலிலிருந்த பித்தப்பையை (Gallbladder) மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றி அசத்தியுள்ளன. மருத்துவ உலகின் எதிர்காலத்தையே முற்றிலுமாக மாற்றியமைக்கக் கூடிய இந்த அதிநவீன தொழில்நுட்ப சோதனை வெற்றி பெற்றுள்ளது உலகளவில் பெரும் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
