சென்னையில் தங்க விலை மீண்டும் அதிகரித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 6) ஒரு கிராம் 22K ஆபரணத் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ.10,005க்கும், ஒரு சவரன் ரூ.1,120 உயர்ந்து ரூ.80,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்க விலை ரூ.80,000-ஐ தாண்டி புதிய சாதனையை எட்டியுள்ளது. அதேசமயம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.137க்கும், ஒரு கிலோ ரூ.1,37,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.