
இந்தியாவில் வரலாறு காணாத வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி விலை 250 ரூபாய் எட்டியுள்ளது. கங்கோத்ரி தாமில் தக்காளி கிலோ 250 ரூபாய் ஆகவும், உத்திரகாசி மாவட்டத்தில் கிலோ 180 முதல் 200 ரூபாய் வரையும் உள்ளது. இந்தப் பகுதியில் தக்காளி விலை திடீரென உயர்ந்து உள்ளதால் மக்கள் அவற்றை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 120 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நியாயவிலை கடைகள் மூலமாக 65 முதல் 70 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயை தாண்டியுள்ளது. அனல் காற்று மற்றும் கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்ட விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.