இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறியப்படும் எனவும் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு பணிகள் நடைபெற்றது. நடப்பு ஆண்டு அபராதத்துடன் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இந்த அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை இணைக்காத பான் கார்டு தாரர்கள் இனி புதிதாக வங்கி கணக்குகளை தொடங்க முடியாது, புதிதாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வாங்க முடியாது, டிமேட் கணக்குகளை ஓபன் செய்ய முடியாது, மியூச்சுவல் ஃபண்டுகளை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வாங்க முடியாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.