கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த தஸ்னி என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பு தண்ணீர் முக்கம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தஸ்னியின் மாமியார் ஆயிஷா அவரை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதனால் மனமடைந்து காணப்பட்ட தஸ்னி 2018 ஆம் ஆண்டு தனது கணவர் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தஸ்னியின் பெற்றோர் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஆயிஷா கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆயிஷாவின் வழக்கு சேர்த்தலா கூடுதல் செஸன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆயிஷாவுக்கு ஏழு வருட சிறை தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பவினநாத் தீர்ப்பளித்துள்ளார்.