பெண் பயணி அடிக்கடி விமான கழிப்பறையை பயன்படுத்தியதற்காக இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோனா சியு என்ற பெண், மெக்சிகோவில் இருந்து வெஸ்ட் ஜெட் (WestJet) விமானத்தில் பயணிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு முன்பு ஜோனாவிற்கு வயிற்றுப் பிரச்னை இருந்ததால் அவர் விமான கழிவறையை அதிகமுறை பயன்படுத்தியுள்ளார்.

இதனால் விமான ஊழியர்கள் ஜோனாவை விமானத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.