லண்டன்: பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான ‘ரவுண்ட் ஆஃப் 16’ சுற்றுப் போட்டியில், மெக்சிகோ அணிக்கு எதிராக களம் காண்பதற்கு முன்பாக இங்கிலாந்து வீரர்கள் வயாகரா மாத்திரைகளைப் பயன்படுத்திக் கொள்ள அணி நிர்வாகம் அதிரடியாக அனுமதி வழங்கியுள்ளது.
பொதுவாக மாத்திரையின் பெயரை கேட்டதுமே பலருக்கும் தவறான எண்ணங்கள் தோன்றினாலும், இங்கிலாந்து அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்ததற்குப் பின்னால் முற்றிலும் அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியிலான மிக முக்கியமான காரணம் ஒன்று ஒளிந்துள்ளது. விளையாட்டு வீரர்களின் ஸ்டாமினாவை மைதானத்தில் தக்கவைக்கவே இந்த வினோத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிரடிப் போட்டி நடைபெறவிருக்கும் மைதானமானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,350 அடி (2,240 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வளவு பிரம்மாண்ட உயரத்தில் காற்று மிகவும் மெலிதாக இருக்கும் என்பதால், வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்களின் உடல் செயல்திறன் சட்டென குறைந்துவிடும் அபாயம் உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், வீரர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்கு வயாகரா மாத்திரை பெரிதும் உதவும் என்பதால் அணி நிர்வாகம் இதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. விளையாட்டு உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கும் இந்த விசித்திரமான செய்தி, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
