கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிப்பை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மீட்பு குழுவினர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் Doxy prophylaxis தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் முகாம்களில் சிறப்பு அறைகளில் தனிமை படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
