மரியாதை என்பது கொடுக்கல் வாங்கல் சார்ந்தது என்பதை இன்றைய தலைமுறையினர் மிகவும் தெளிவாக உணர்த்தத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பெரியவர் ஒருவர் ஒரு இளைஞரை “நீ, வா, போ” என ஒருமையில் விளித்துப் பேசியது மோதலை உருவாக்கியுள்ளது.
மேலும் வயது மூத்தவர் என்பதால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற காலாவதியான எண்ணத்தை ஏற்க மறுக்கும் அந்த இளைஞர், ஒரு நிமிடத்திற்குள் தகுந்த பதிலடி கொடுத்து மரியாதையாக பேச வேண்டியதன் அவசியத்தை அவருக்குப் புரியவைத்தார்.
Gen-Z be breaking Old generations base less fragile ego 🗣️🙏 pic.twitter.com/fgBWogs8dM
— GLOBAL NEWS (@MohiniWealth) April 17, 2026
“>
இந்தச் சம்பவம் இன்றைய கால மாற்றத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகிறது. “வயதுக்கு மரியாதை” என்பதற்குப் பதில் “நடத்தைக்கு மரியாதை” என்ற கொள்கையை இளைஞர்கள் அதிகம் பின்பற்றுகின்றனர். என ஒருமையில் பேசுவது ஒருவரின் கண்ணியத்தைக் குறைப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்த வீடியோ, உரையாடலில் வயது வித்தியாசம் இன்றி பரஸ்பர கண்ணியம் பேணப்பட வேண்டும் என்ற முக்கியமான பாடத்தைச் சொல்லிக் கொடுத்துள்ளது.
