சமூக வலைதளத்தில் ஒரு மாமியாரும் மருமகளும் பயங்கரமாக சண்டை போடும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் அருகே உள்ள பகுதியில் சக்கரவர்த்தி மற்றும் சின்ன பாப்பா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் இருவரும் தங்கள் மனைவிகளுடன் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சின்ன பாப்பா தன்னுடைய விளைநிலத்தில் சம்பவ நாளில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவருடைய மூத்த மருமகள் ராஜேஸ்வரி அங்கு வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி கொடூரமாக தாக்கிக் கொண்டனர். அவர்களை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்ற போதிலும் இருவரும் ஒருவருக்கொருவர் சரமாறியாக அடித்து குத்துச்சண்டையில் வருவது போன்ற சண்டை போட்டனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.