வனிதா விஜயகுமார் குக் வித் கோமாளி பிக் பாஸ் உள்ள தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர். வனிதா விஜயகுமார் நடிகர் விஜயுடன் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தை வனிதா இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடித்துள்ளார். இந்த படத்தில் ஷகிலா, ஸ்ரீமன், பவர் ஸ்டார் சீனிவாசன், பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார்.

இன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. படக் குழுவினருக்கு அதிர்ச்சி தரும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் தான் இசையமைத்த மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் ராத்திரி சிவராத்திரி பாடல் பாடலை அனுமதி பெறாமல் மிஸ்டர் அண்ட் மிசஸ் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். அந்த பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என இளையராஜா மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கினை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.