தமிழ்நாடு பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது என்று பீகார் அரசு குழுவினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோக்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக உண்மை நிலையை அறிய பீகார் மாநில அரசு குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பியது.

இந்த குழுவினர் சென்னையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர். பின்னர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பேசிய பீகார் மாநில ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் தவறான வீடியோக்களே தமிழகத்தில் நடைபெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் காரணமாக பயம் உண்டானது என தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த வதந்தி பரப்பவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது என தெரிவித்தார்.