ஒவ்வொருவரும் தங்களது உடலில் தலைமுடி, தாடி, முகம், கை, கால் உள்ளிட்டவற்றில் ஏதாவது மாற்றம் செய்து மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி கவர நினைப்பது இயல்பான ஒன்றுதான்.. அது ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடும்.. அந்த வகையில், Tattoo மூலம் தங்களுக்கு பிடித்தவற்றை கை மற்றும் உடலின் பிற பகுதிகளில்  வரைந்து அழகுபடுத்தி கொள்வர். அப்படியான Tattoo எப்படி உடம்பில் வாழ்நாள் முழுவதும் அழியாமல் தங்குகிறது என்பது குறித்து தெரியுமா ? நமது தோள்கள்  லேயர்களாக பிரிக்கப்பட்டிருக்கும்.

அதில் Tattoo  போட பயன்படும் ஊசி நமது தோளின் இரண்டாவது லேயரில் மையை செலுத்துகிறது. இதை நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் கிருமிகள் அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஏதேனும் ஒன்று உள்ளே நுழைவதாக கருதி அதை எதிர்க்க Tattoo போடப்படும் பகுதிக்கு செல்லும். ஆனால் மையின் அளவு அதிகமாக இருப்பதால் வெள்ளை அணுக்களால் அதை முழுவதுமாக அகற்ற இயலாது. அது நமது உடலில் முதலில் ஒரு காயமாக பதிய, நாளடைவில் அது சரியானதும் காயம் குணமாகி Tattoo மை மட்டும் நமது உடலில் நிரந்தரமாக தங்கிவிடும்.