இன்றளவும் இந்திய மக்களிடையே மிகவும் மதிக்கத்தக்க சொத்துகளில் அதே சமயம் அழகுப் பொருட்களாகவும் கருதப்படும் முக்கிய பொருள் தங்கம். சிறுவயதில் தங்கத்தின் விலை இப்போது உள்ள விலையை விட மிகக் குறைவாக இருந்ததாக வீட்டில் பெரியவர்கள் கூறி கேட்டிருப்போம். அப்போதே விலை குறைவாக இருந்த தங்கத்தை வாங்கி இருக்கலாம் என புலம்புவதையும் கேட்டிருப்போம். ஆனால் அது எவ்வளவு குறைவான விலையில் இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்திருப்போமா? 

ஆம் 1920 இல்  ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 21. இதனுடைய மதிப்பு அப்போதைய நிலைக்கு அதிகமாக இருந்தாலும் கூட, தற்போதைய நிலையை ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது என்றே கூறலாம். நடப்பு ஆண்டில்  ஒரு பவுன் தங்கத்தின் விலை ₹48,220 ஆகும். தற்போது இது குறித்த விலைப்பட்டியல் ஒன்று இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியாகி அது வைரலாகி வருகிறது. கூடுதல் தகவல்களுக்காக அதையும் இணைத்துள்ளோம்.