இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதன்படி வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் இருந்து 25 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 கோடிக்கும் குறைவான எஃப்டிகளுக்கு, ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 6.8 சதவீத வட்டி கிடைக்கும்.

இதனையடுத்து 2 முதல் 3 ஆண்டுகளுக்கு 7 சதவீத வட்டியும், 3 முதல் 5 ஆண்டுகளுக்கு 6.5 சதவீத வட்டியும், 5 முதல் 10 வருட டெபாசிட்டுகளுக்கு 6.5 சதவீத வட்டியும் கிடைக்கும். இதில் மூத்த குடி மக்களுக்கு‌ 0.5 சதவீத வட்டி கூடுதலாக கிடைக்கும். மேலும் ரிசர்வ்  வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதால் பிக்சட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது.