111 பேனாக்களை கொண்டு மூன்று மாதங்களில் தனது காதல் மனைவிக்கு 1000-ம் பக்கத்தில் கடிதம் எழுதிய நபரின் செயல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைரலாகியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் மீரத் நகரை சேர்ந்தவர் ஜீவன் சிங். இவர் கமீலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது காதல் கடந்து வந்த பாதையை பகிர்ந்துள்ளார். வேலை நிமித்தமாக கமீலாவை பிரிந்து பணி செய்து வந்த ஜீவன் சிங் தனது மனைவிக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக 1000 பக்க கடிதத்தை எழுதியுள்ளார். இதற்காக தனக்கு 12 பேனாக்கள் தேவைப்பட்டது.

கடிதம் எழுத மூன்று மாதங்கள் மற்றும் மூன்று நாட்களை எடுத்துக் கொண்டேன் எனவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கடிதத்தின் எடை மட்டுமே எட்டு கிலோ இருத்த நிலையில் அந்த கடிதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் அனுப்ப மட்டும் அந்த காலத்தில் 700 ரூபாய் செலவான நிலையில் இந்த ஆயிரம் பக்க கடிதம் இவர்களின் காதல் சின்னமாக மாறி உள்ளது.