
தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு.
வங்கியில் நகைக் கடன் வைத்திருப்போர் அக்கடனை அடைக்க முடியாதபட்சத்தில், நகைகள் ஏலத்திற்கு செல்லாமல் இருக்க அதனை புதுப்பிப்பது வழக்கம். இந்நிலையில், வாடிக்கையாளர்கள் பெற்ற நகைக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுவதையும், கடன் முடிக்கப்படுவதையும் உறுதிசெய்யுமாறு வங்கிகள் தங்கள் கிளைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. ஒரு சில வங்கிகளில் கடனை புதுப்பிக்கவோ அல்லது மேம்படுத்தப்படவோ அனுமதிக்க கூடாது என கூறுவது போல தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குற்றச்சாட்டு மட்டுமே மக்கள் நீங்கள் உங்கள் வங்கியில் இது உண்மையா என கேட்டு அறிந்து கொள்ளுங்கள் எனவும், நகை கடன் விஷயத்தில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றன.