இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய பண்டிகை நாட்களின் போது வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பை ரிசர்வ் வங்கி முன்னதாகவே வெளியிட்டு வருகிறது. பொதுவாக அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, பண்டிகை தினங்கள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பண்டிகை தின விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

எந்தெந்த மாநிலத்தில் பண்டிகை தீபம் கொண்டாடப்படுகிறது அந்த மாநிலங்களில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுவதற்கு பதில் அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்க திட்ட மிட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கினால் நாடு முழுவதும் இந்த புதிய விடுமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது