இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக வங்கி சார்ந்த அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். அதேசமயம் அருகில் உள்ள ஏடிஎம் மூலமாக பணத்தை எடுத்தல் மற்றும் டெபாசிட் செய்தல் போன்ற பணிகளையும் எளிதில் செய்து முடித்து விடுகிறார்கள். இந்த ஏடிஎம் சேவைகளுக்கு வங்கிகள் உரிய கட்டடத்தை வசூல் செய்கின்றன. அதன்படி பொதுத்துறை வங்கிகள் மெட்ரோ நகரங்களில் மூன்று முறையும் பிற நகரங்களில் ஐந்து முறையும் இலவசமாக பணத்தை எடுக்க அனுமதி வழங்குகிறது. எஸ்பிஐ வங்கியின் இலவச வரம்பை மீறும் போது பத்து ரூபாய் எஸ் பி ஐ அல்லாத ஏடிஎம்களில் பணம் எடுக்க இருவது ரூபாய் வசூல் செய்யப்படுகின்றது.

இந்நிலையில் தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி ஐந்து இலவச பண பரிவர்த்தனைக்கு பிறகு 21 ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறது. அடுத்ததாக ஐசிஐசிஐ வங்கி ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு 20 ரூபாய் மற்றும் நிதி இல்லாத பரிவர்த்தனைகளுக்கு 8.50 வசூல் செய்கிறது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பத்து ரூபாயும் மற்ற ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது 20 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்கின்றது. ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க 21 ரூபாய் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்கின்றது.