இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் 5.3 லட்சம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, 2013 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 4,62,733 மோசடிகள் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் 2.24 லட்சம் கோடி அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான மோசடி நடந்துள்ளது. இன்டர்நெட் பணப்பரிவர்த்தனைகள் மூலமாக 6659 மோசடிகள் இடம் பெற்றுள்ளன என கூறப்பட்டுள்ளது.