ஒவ்வொரு வங்கியும் அவர்களது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையை அதாவது மினிமம் பேலன்ஸ் விட குறைவாக இருக்கும் போது அவர்களுக்கு எஸ் எம் எஸ், மின்னஞ்சல் மற்றும் கடிதங்களின் மூலம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் நீங்கள் இருப்பு தொகையை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். இந்த தொகை வங்கிகளை பொறுத்து மாறுபடும். பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகைகளை விதிக்கின்றன. எனவே வாடிக்கையாளர்கள் இதனை மீறும் போது தான் அபராதங்கள் விதிக்கப்படும்.