வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம்  அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை புயல் ஈர்த்தப்படி வடக்கு நோக்கி செல்வதால் இனி தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் உருவான புயல் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் எனவும் தெரிவித்துள்ளது.